மாணவர்கள் இடைநிற்றல் - பதிலளிக்க உத்தரவு
இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பள்ளி கல்வித் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த முத்துச்செல்வம் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் பல மாணவர்கள் வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
மாணவர்கள் இடைநிற்றல் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்புகளுக்கு இடையே மிகப் பெரும் வேறுபாடு உள்ளதால்,
இடைநின்ற மாணவர்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மனுதாரர் கோரி இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story