விசாரணைக்கு வந்த தேர்தல் வழக்குகள் - துரைமுருகன் , சி.விஜயபாஸ்கருக்கு உத்தரவு
தேர்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதி சட்ட மன்ற உறுப்பினரான அமைச்சர் துரை முருகன் வெற்றியை எதிர்த்து தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் வி.ராமு வழக்கு தொடர்ந்திருந்தார். இதே போல, விராலிமலை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் வழக்கு தொடர்ந்தார். மேலும், பெருந்துறை தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, துரைமுருகன், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை செப்டம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Next Story