ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை - 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கும் மேல் முன்பதிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை - 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கும் மேல் முன்பதிவு
x
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு
வருகிறது. இங்கு தயாரிக்கப்படவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு
இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் ஓலா நிறுவனம் சார்பில் 500 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.அதிநவீன தொழில்நுட்பத்துடன் 3 ஆயிரம் ரோபோக்களை கொண்டு 2 விநாடிக்கு ஒரு ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இணையத்தில் அறிவிப்பு வெளியான, சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் முன் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்காக 400 பெருநகரங்களில் சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்படும் எனவும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்