வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்
வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்
வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் - விசாரணை நடத்த உள்ளதாக தமிழக அரசு பதில்
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக புகார் எழுந்தது.முறைகேடு புகாரை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கக் கோரி திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர்கள் ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கணக்குத் தணிக்கை துறை அறிக்கை அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடத்த 8 வார கால அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதேநேரம், வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கணக்கு தணிக்கை குழு அளித்த அறிக்கை குறித்து மனுதாரர் விளக்கம் அளிக்க அவகாசம் கோரினார்.வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2 வது வாரத்திற்கு தள்ளிவைத்த நீதிபதிகள், முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.
Next Story