ஆந்த்ராக்ஸ் தாக்கி உயிரிழந்த யானை - பாதுகாப்பான முறையில் தகனம்
கோவை மாவட்டம், ஆனைகட்டி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்த காட்டு யானையின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம், ஆனைகட்டி வனப்பகுதியில் ஆந்த்ராக்ஸ் நோயால் உயிரிழந்த காட்டு யானையின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனைகட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. யானைக்கு ஆந்த்ராக்ஸ் அறிகுறி தென்பட்டதையடுத்து, அதன் ரத்த மாதிரியை வனத்துறையினர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனை முடிவில் யானை ஆந்த்ராக்ஸ் தாக்கத்தால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு வழிமுறைகளின்படி யானையின் உடலை வனத்துறையினர் எரியூட்டினர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சேம்புக்கரை வனப் பகுதியில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 250 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது .
Next Story