படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் விவரங்களை அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் விவரங்களை அளிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
x
அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா தலைமையில் வரும் 16ஆம் தேதி , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உடனான காணொலிக்காட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து பள்ளி கல்வி ஆணையர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்  கடந்த 2011ம் ஆண்டு முதல், நடப்பு ஆண்டு வரையான 10 ஆண்டு கால கட்டத்தில், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்களில் எத்தனை பேர் படிப்பை பாதியில் கைவிட்டனர் என்ற விவரங்களை அதிகாரிகள் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணங்களை வசூலித்த பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்கள் , அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் விவரம், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான  பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை குழு குறித்த  விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்