சிவசங்கர் பாபா மீதான 2வது போக்சோ வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்

சிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x
சிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது வழக்கில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2 வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்