ஜிகா வைரஸ் - வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

கேரளாவில் பரவி வரும் ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
x
கேரளாவில் பரவி வரும் ஜிகா வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். சுகாதாரத் துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நகர் புறங்களில் வீடுகளில் தண்ணீர் தொட்டிகள், ட்ரம்கள், டயர்கள், குளிர்சாதன பெட்டிகளில் கொசு பரவ வாய்ப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பழைய பொருட்கள் மறு சுத்திகரிப்பு நிலையம், பேருந்து பணிமனை, கட்டுமான பகுதி, பால் கொள்முதல் நிலையம் ஆகியவற்றில் கொசு உற்பத்தியை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அங்கன்வாடி மைய ஊழியர்கள் வாயிலாக கொசு ஒழிப்பு பணிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாராசிட்டமால், சுக்ரால்ஃபேட் உள்ளிட்ட மருந்துகளை தேவையான அளவு கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், டெங்கு, ஜிகா தொற்றை கண்டறியும் வண்ணம் பரிசோதனையை தயங்காமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தெருக்களில் மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் கண்டறியப்பட்டால் கொசு ஒழிப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்