குடியரசுத்தலைவருக்கு எதிர்கட்சியினர் கடிதம்

சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மீது பொய்யாக வழக்கு பதிந்தோர், மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு, கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்
குடியரசுத்தலைவருக்கு எதிர்கட்சியினர் கடிதம்
x
இது குறித்து எதிர்கட்சியினர் எழுதிய கடிதத்தில்,  பீமா கோரேகான் கலவரம் தொடர்பாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  பொய் வழக்கு பதிவு செய்ய காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்துமாறு குடியரசுத் தலைவரை எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  மேலும் அவருக்கு ஜாமின் வழங்கி வீட்டுக்கு அனுப்பாமல், அதனை நிராகரித்ததை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சியினர்,  மும்பை நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு மிகவும் தாமதமாக சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்