கொடைக்கானலில் மீண்டும் பூங்காக்கள் திறப்பு - சுற்றுலா பயணிகள் ஆர்வம்

கொடைக்கானலில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டனர்.
x
 கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு முதற்கட்டமாக பிரையண்ட்பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி 1 மணி நேரத்திற்கு 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கோடைவிழா, மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில் தற்போது பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலாபயணிகள் ஆர்வத்துடன் கண்டுரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்