"ஒன்றிய அரசு என்பதை ஏற்க முடியாது" - ஓ.பன்னீர் செல்வம்

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
x
இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்றும்

யூனியன் என்ற வார்த்தைக்கு "மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது" என்பதுதான் பொருள் என கூறுவது சரியானதல்ல எனவும்,

"மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன்" என்பது தான் "Union Of States" என்பதற்கு பொருள் எனவும் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் "Government Of India" என்றே இருப்பதாகவும்,

அதனால் இந்திய அரசு என்று கூறுவது தான் பொருத்தமானது என்றும் கூறியுள்ளார்.

ஆளுநர் உரையிலிருந்து 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என கூறுவது நியாயமா? என கேள்வி எழுப்பியுள்ள ஓ.பன்னீர்செல்வம்

இந்திய இறையான்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர், ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசிய சொற்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலின்போது மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம், தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்