கைதி முத்து மனோ கொலையான சம்பவம் - 73 நாட்கள் கழித்து சடலம் ஒப்படைப்பு

பாளையங்கோட்டை சிறையில் இருந்த விசாரணை கைதி முத்து மனோ அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 73 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
x


சொந்த ஊரில் அடக்கம் செய்ய முடிவு 
பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் 

பாளையங்கோட்டை சிறையில் இருந்த விசாரணை கைதி முத்து மனோ அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 73 நாட்களுக்கு பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வாகை குளத்தை சேர்ந்த முத்து மனோ என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சக கைதிகளால் தாக்கப்பட்ட அவர், ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி உயிரிழந்தார். இதனிடையே உரிய நடவடிக்கை கோரி போராட்டம் நடத்திய உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே முத்துமனோ குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்ச ரூபாய் நிவாரண தொகை அறிவித்த நிலையில் சடலத்தை பெற்றுக் கொள்ள உறவினர்கள் முன்வந்தனர். 73 நாட்களுக்கு பிறகு முத்து மனோவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்