ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து சுகாதார துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
x
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து சுகாதார துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.தொற்று அதிகம் பதிவான கோவை, ஈரோடு, சேலம், தஞ்சை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான அளவே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகளால் இந்த 11 மாவட்டங்களிலும் தற்போது தொற்று குறைந்து வருகிறது.இந்நிலையில்  ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மற்றும் முக்கிய துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.தற்போது 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆலோசனைக்கு பிறகு தொற்று அதிகம் பதிவான மாவட்டங்களிலும் போக்குவரத்து அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்