அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமல்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் அமல் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் இன்று முதல் அமல்
x
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் அமல் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு, யுனைடெட் இந்தியா நிறுவனத்துடன் 4 ஆண்டுகள் கால ஒப்பந்தம் செய்திருப்பதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இன்று முதல் 2025 ஜூன் 30 வரை 4 ஆண்டுகள் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் இணைந்துள்ள ஆயிரத்து 169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு, காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அரசு ஊழியர்களிடம் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை 180ல் இருந்து 300ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்