கொரோனா பாதிப்பு எதிரொலி; நாட்டில்798 மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை நாட்டில், 798 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை நாட்டில், 798 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 128 மருத்துவர்களும், பீகார் மாநிலத்தில் 115 மருத்துவர்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தில் 79 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 51 மருத்துவர்கள், ராஜஸ்தானில் 44 மருத்துவர்கள், தெலுங்கானாவில் 37 மருத்துவர்கள் ஒடிசா மாநிலத்தில் 36 மருத்துவர்கள் கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழந்துள்ளனர்.இதேபோல, ஜார்கண்ட் மாநிலத்தில் 39 மருத்துவர்கள், குஜராத் மாநிலத்தில் 39 மருத்துவர்கள், ஆந்திரா மாநிலத்தில் 40 மருத்துவர்கள் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 62 மருத்துவர்களும் இந்த இரண்டாவது கொரோனா அலையில் உயிரிழந்துள்ளனர்.
Next Story