"கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த புதிய திட்டம்"; "விரைவில் முதல்வர் அறிவிப்பார் " - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் கழிவுநீரை சுத்திகரிக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
x
சென்னையில் கழிவுநீரை சுத்திகரிக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று,  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலகத்தில் கே. என்.நேரு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டு பகுதியில் கூவம் ஆற்றில் கழிவு நீரை தடுக்கும் மையத்தையும் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த புதிய திட்டத்தை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்