"கோயில் தொகுப்பூதிய பணியாளர்கள்" - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை
"கோயில் தொகுப்பூதிய பணியாளர்கள்" - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை
"கோயில் தொகுப்பூதிய பணியாளர்கள்" - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கோரிக்கை
இந்து சமய அறநிலைய துறையின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு, அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோயில்களுக்கு சொந்தமான 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், மனைகள் மற்றும் கட்டிடங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது, கோயில் ஆக்கிரமிப்பு இடங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே வழங்க இருப்பதாக செய்திகள் வருவதாக கூறியுள்ள அவர், அந்த இடங்களை ஏலம் விட்டு கோயில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 40 ஆயிரம் தொகுப்பூதிய பணியாளர்களை விடுவிக்கும் முடிவை கைவிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story