"3 -ஆம் அலை - 2 தவணை தடுப்பூசி அவசியம்" - மருத்துவ வல்லுநர்கள் கருத்து
கொரோனாவிற்கு எதிராக இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்தியிருந்தால் 90 சதவிகித பாதுகாப்பு கிடைக்கும் என, மருத்தவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மூன்றாவது அலையிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, முதல் தவணை மட்டும் செலுத்தியிருந்தால் போதுமானதாக இருக்காது என மருத்துவ வல்லுநர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது அலைக்கு எதிராக போராட 33 சதவிகித எதிர்ப்பு சக்தி மட்டுமே கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 4% மக்கள் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 18 சதவிகிதம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.இதனால் இரண்டு தவணை தடுப்பூசி முழுவதுமாக செலுத்தி கொண்டால் 90 சதவிகித பாதுகாப்புடன் 3வது அலை தொற்றை எதிர்கொள்ள முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story