ஆளுநர் உரை - நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முதல் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முதல் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியதும், சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார்.
பாண்டுரங்கன், முஹம்மத்ஜான், பாப்பாசுந்தரம், அரங்கநாயகம் உள்ளிட்ட13 மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திரைப்பட நடிகர் விவேக், எழுத்தாளர் கி. ராஜநாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா, துரை சந்திர சேகரன் ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்களை பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார்
இதன்பின்னர், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் உதய சூரியன் முன்மொழிந்தார்.
அப்போது, நீட்டில் இருந்து விலக்கு என்பதற்கு பதிலாக, நீட்டை உருவாக்குவோமென்று தவறுதலாக உதயசூரியன் பேசினார்.
தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நீட்டை உருவாக்குவதற்கு என்ற தவறான வார்த்தையை பதட்டத்தில் உறுப்பினர் பயன்படுத்தி விட்டார் என்றும்,...
அதனை நீட்டில் இருந்து விலக்கு பெறுவதற்காக என மாற்றுமாறு கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.,
Next Story