3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்
x
3ஆம் நபர் பெயரில், போலியாக சொத்துப் பதிவு விவகாரம்

தனது சொத்து, வேறொருவர் பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அந்த விற்பனை பத்திரத்தை ரத்து செய்யவும் மரக்காணம் சார் பதிவாளருக்கு உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த விசாரணையின் போது, சொத்தின் உரிமையாளர் தவிர, 3ஆம் நபர் யாரும் மோசடி சொத்து பதிவு செய்யவில்லை என்பதை உறுதி செய்ய, உரிய நடைமுறைகளை பதிவுத்துறை ஏற்படுத்த வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வாதிட்டது.பதிவுத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்கள் மூன்றாம் நபர்கள் பெயரில் பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில், முந்தைய வில்லங்கத்தை சரிபார்க்கும் வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.வாதங்களையும் கேட்ட நீதிபதி, அனைத்து பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில், மூன்றாம் நபர் பெயரில், சொத்து பதிவு செய்வதை தடுக்க உள்ள வசதிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பதிவுத் துறை தலைவருக்கு உத்தரவிட்டார். மறு விசாரணை ஜூலை -5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்