பப்ஜி மதன் வழக்கு-நீதிபதி கண்டனம்
யூடியூபர் பப்ஜி மதனின் பேச்சுகளை காது கொடுத்து கேட்டுவிட்டு நாளை வருமாறு அவரது வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பப்ஜி மதன் வழக்கு-நீதிபதி கண்டனம்
யூடியூபர் பப்ஜி மதனின் பேச்சுகளை காது கொடுத்து கேட்டுவிட்டு நாளை வருமாறு அவரது வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.பெண்கள், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி பணம் பறித்த வழக்கில் முன்ஜாமீன் கோரி யூடியூபர் பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.பப்ஜி மதன் தரப்பு வழக்கறிஞர், சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்டுள்ளதகாவும், Card-4 பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் கூறினார்.காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பப்ஜி மதனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அப்போது காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆடியோவை கேட்ட நீதிபதி,பப்ஜி மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா என மனுதாரரின் வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பினார்.இந்த ஆடியோ கேட்க முடியாத வகையில் இருப்பதாக கண்டனம் தெரிவித்த நீதிபதி, அந்த பதிவுகளை கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடும்படி உத்தரவிட்டார்.
Next Story