பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்க உள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்க உள்ளார். மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசும் அவர் தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கிறார்...
குறிப்பாக நீட் தேர்வு ரத்து , ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்கிட வேண்டும் , தமிழகத்திற்கு கூடுதல் கொரோனோ தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் , ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தரவேண்டும் , கொரனோ தடுப்பு பணிகளில் தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்திட வேண்டும் , செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திட வேண்டும் உட்பட தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார்...தொடர்ந்து இன்று இரவு டெல்லியில் தங்கம் அவர் டெல்லி நிகழ்ச்சிகளை முடித்த பிறகு நாளை மீண்டும் சென்னைக்கு வர உள்ளார்.....தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஹர்ஷவர்தன் , ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்து தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்க வாய்ப்பிருப்பதாகவும் அதேபோல் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் திமுக கட்சி அலுவலகத்தினை நேரில் பார்வையிட வாய்ப்பு இருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன...முதலமைச்சரின் இந்த பயணித்தில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் , திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி ஆர் பாலு , பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி , தமிழக அரசின் டெல்லி மேலிடம் பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்....
Next Story