மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு

நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
x
நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என  நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார்.அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், சாட்சிகளை கலைக்க கூடும் என்பதால் மணிகண்டனுக்கு ஜாமின் தரக் கூடாது என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி அப்துல்குத்தூஸ் உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்