சிபிஎஸ்இ +2 மதிப்பெண் அளவீடு எப்படி?

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
x
கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் வெயிட்டேஜ் முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க நிபுணர் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10, 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண்கள் மற்றும் 12ஆம் வகுப்பு உள்ளீட்டு தேர்வு மதிப்பெண்களை சேர்த்து மதிப்பெண் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த இறுதி அறிக்கையை இன்னும் ஓரிரு தினங்களில் நிபுணர் குழு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்