டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க அனுமதி - அரசியல் தலைவர்கள் கண்டனம்
ஊடரங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஊடரங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுக்கடை திறப்பு என்பது, மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கடுமையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று, குறைந்து வரும் நிலையில் மதுக்கடை திறப்பு, பரவல் அதிகரிப்புக்கு வழி வகுக்கும் என ராமதாஸ் கூறியுள்ளார். எனவே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்றும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எதிர்கட்சி தலைவராக இருந்த போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என அப்போதைய அதிமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த ஸ்டாலின், தற்போது டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளதாக விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்களிடம் சொல்வது ஒன்று, ஆட்சி வந்த பின்பு சொல்வது வேறொன்றாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story