கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு... தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகள் விளக்கம்
திருச்சி கல்லணையில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு... தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகள் விளக்கம்
திருச்சி கல்லணையில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.காவிரி டெல்டா மாவட்டங்களில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 647 பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி சுமார் 4 ஆயிரத்து 61 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்கால், வடிகால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. மேலும், கல்லணை கால்வாயில் சிமென்ட் தளம் அமைப்பது, கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மேலும், அங்கு கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், தூர்வாரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
Next Story