தஞ்சையில் திடீர் மழை - வேதனை தெரிவிக்கும் விவசாயிகள்

தஞ்சாவூரில் பெய்த திடீர் மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து முளைக்கத் துவங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
x
தஞ்சாவூரில் பெய்த திடீர் மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து முளைக்கத் துவங்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.அருள்மொழிபேட்டை, மாரியம்மன் கோவில், பிள்ளையார்நத்தம், குளிச்சப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை பெய்ததால், நெற்கதிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்து முளைக்கத் துவங்கியுள்ளன. நெல்மணிகளை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்றால், அங்கு 700 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், சாலைகளில் நெல்மணிகள் குவிந்து கிடப்பதால், கூடுதலாக ஆயிரத்து 500 மூட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்