தொற்று குறைவான மாவட்டங்கள் - தளர்வுகள் என்ன?

தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர நோய் தொற்று குறைந்து வரும் மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் என்ன?
x
தனியாக செயல்படும் மளிகை, பல சரக்குகள், காய்கறிகள், இறைச்சி மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். 

காய்கறி, பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன்சந்தை மற்றும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் அனைத்தும் 30 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம்.

சார் பதிவாளர் அலுவலகங்கள் நாளொன்றுக்கு 50 சதவீதம் டோக்கன்கள் வழங்கி பத்திரப்பதிவுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். 

எலெக்ட்ரிஷியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோர் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரியலாம். பல்புகள், கேபிள்கள் உள்ளிட்ட மின்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், ஹார்டுவேர் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். 

இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் இ - பதிவுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்சிகளில் ஓட்டுநருடன் சேர்த்து 3 பயணிகள், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகள் பயணிக்கலாம்.  நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் உள்ளிட்ட இடங்களுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ- பாஸ் பெற்று பயணிக்கலாம். 


Next Story

மேலும் செய்திகள்