முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் - பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கொரோனா நிவாரண உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2ஆம் தவணை கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மேலும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சம்பளம் இன்றி பணிபுரியும் 14 ஆயிரம் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.இதேபோல் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவ பணியாளர்கள், காவலர்கள், நீதிபதிகள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டம் மற்றும் பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்
Next Story