100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் - அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையத்தை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.
x
பள்ளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் அமைப்பு மூலம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்