"நீரிழிவு நோய் உள்ளவர்கள் இறப்பது அதிகம்" - ஆய்வில் தகவல்
கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களில், நீரிழிவு நோய் உள்ளவர்களே அதிகம் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பவர்களில், நீரிழிவு நோய் உள்ளவர்களே அதிகம் என ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. இணை நோய் உள்ளவர்கள் அதிகம் உயிரிழந்த நிலையில், 800க்கும் மேற்பட்டவர்களை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில், 400க்கும் மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளதும், அதில் 10% வரை உயிரிழப்பதும் கண்டறியப்பட்டது. இந்நிலையில், ஆய்வு நடத்திய குழுவில் இருந்த நீரிழிவு நோய் நிபுணர் அருண் ராகவன், நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது முக்கியம் எனவும், அதேபோல் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story