கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
சிதம்பரம் அருகே அம்மாபேட்டை வள்ளலார் நகரில் வசித்துவரும் தனலட்சுமி என்ற 88 வயது மூதாட்டி தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்துள்ளார்,.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் கழுத்தளவு நீரில் சிக்கி தவித்த மூதாட்டியை காயமின்றி பத்திரமாக மீட்டனர்,. மேலும் கிணற்றினை பாதுகாப்பாக மூடி வைக்கவேண்டும் எனவும் தீயணைப்பு துறையினர் அறிவுரை வழங்கி சென்றனர்
Next Story