பாலியல் புகாரில் கைதான தடகள பயிற்சியாளர்-சிறையில் அடைக்குமாறு உத்தரவிட மறுப்பு

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடுவதற்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் நீதிபதி மறுத்துள்ளார்.
x
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட தடகள பயிற்சியாளர் நாகராஜனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிடுவதற்கு போதிய ஆவணங்கள் இல்லாததால் நீதிபதி மறுத்துள்ளார்.தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பயிற்சியாளர் நாகராஜன் நேற்று காலை கைது செய்யப்பட்டார். பின்னர் கொரோனா பரிசோதனைக்குப் பின் இரவு 10 மணிக்கு சிறார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக் வீட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் இல்லை என கூறி சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். பின்னர் இரவு 12 மணியளவில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்ட போது, கைதானதற்கான ஆவணத்தில் உறவினரின் கையெழுத்து இல்லை என்பதை குறிப்பிட்ட நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்ததோடு , முறையான ஆவணமின்றி நள்ளிரவில் தொந்தரவு செய்ததாக ஆய்வாளர் ஜெயந்தி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.  இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெறும் போது அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறும், நாகராஜனை மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்