தஞ்சை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா - மருத்துவமனையில் நிரம்பும் படுக்கைகள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகினறன.
தஞ்சை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா - மருத்துவமனையில் நிரம்பும் படுக்கைகள்
x
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகினறன. இதனால் தொற்று பாதித்தவர்கள் பேருந்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாளுக்கு நாள் அந்த மாவட்டத்தில் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளி  திடலில், முள்புதர்கள் அகற்றப்பட்டு தற்காலிகமாக கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக, ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் கூடிய 270 படுக்கைகள் அமைப்பதற்கு பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறைவு பெறும் என  எதிர்பார்க்கப்படுகிறது.அதன் பின் அங்கு ஆக்சிஜன் தேவைப்படுவோர் சிக்கைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்