ஆனந்தக் குளியல் போட்ட பொன்னி யானை - கோடைக்கு இதமாக குளுகுளு குளியல்

திருச்செந்தூர் அருகே உள்ள ஆவுடையார் குளத்தில், கோடை காலத்திற்கு இதமாக பொன்னி யானை ஆனந்தக் குளியல் போட்டது.
x
திருச்செந்தூர் அருகே உள்ள ஆவுடையார் குளத்தில், கோடை காலத்திற்கு இதமாக பொன்னி யானை ஆனந்தக் குளியல் போட்டது. பாகன்களால் வளர்க்கப்படும் யானைகள் பெரும்பாலும் திருமணம், பிறந்த நாள் விழாக்கள், கோவில் விழாக்கள், ஆகியவற்றிற்கு அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலங்களிலோ அல்லது வரவேற்பிற்காகவோ பயன்படுத்தப்படும். இவ்வாறு வளர்க்கப்படும் யானைகளை குளங்களிலும் ஆறுகளிலும் மூழ்கி விளையாடத்தான் விரும்பும்...அந்த வகையில் பெருங்குளத்தைச் சேர்ந்த பொன்னி யானை ஆவுடையார் குளத்து நீரில், தும்பிக்கைகளில் நீரை அள்ளி வீசி உற்சாகக் குளியல் போட்டது . இதனை கண்ட திருச்செந்தூர் பகுதி மக்கள் மெய் மறந்து பொன்னி யானையை ஆர்வத்துடன்  கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்