திடீரென உடைந்து உள்வாங்கிய பாலம் - மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, இணைப்புச் சாலையில் இருந்த பாலம் உடைந்ததால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திடீரென உடைந்து உள்வாங்கிய பாலம் - மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
x
திடீரென உடைந்து உள்வாங்கிய பாலம் - மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, இணைப்புச் சாலையில் இருந்த பாலம் உடைந்ததால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.திண்டிவனம் - வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில், நெய்குப்பி கிராமத்திற்கான இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலையில் வைரபுரம் ஏரிக்கு அருகாமையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. நெய்குப்பி, கொடியம்புதூர், கொடியம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, இந்தப் பாலம் பிரதான சாலையாக இருந்து வந்தது. மேலும், 20 கிராமங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அத்தியாவசியத் தேவைக்காக இந்தச் சாலையை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களாக இந்தப் பாலம் பழுதடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென உடைந்து உள்வாங்கியது. இதனால், இந்த சாலையை பயன்படுத்தி வந்த கிராம மக்கள், பத்து கிலோ மீட்டர் வரை சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்