நீர்ப்பாசன திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - "அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு"
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள நீர்நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
நீர்ப்பாசன திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் - "அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு"
பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள நீர்நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்த ஆsய்வு கூட்டம் நடைபெற்றது,. அதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்,. அப்போது மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட கால்வாய்கள் மற்றும் ஏரிகள் புனரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் நீர் நிலைகளுக்கு முன்னுரிமை வழங்கி, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு துரைமுருகன் உத்தரவிட்டார்,. குறிப்பாக, பருவமழை காலங்களில் வெள்ள நீரை வீணாக்காமல் பயன்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் துரைமுருகன் அப்போது அறிவுறுத்தினார்,. மதுரை மண்டலத்தை தொடர்ந்து இன்றைய தினம் கோவை மற்றும் சென்னை மண்டல அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story