கேரளாவில் அறிவிக்கப்பட்ட தளர்வு - அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரும் மக்கள்
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட ஒரு நிலையில், தமிழக-கேரள எல்லையில் வழக்கம்போல கடைகள் செயல்பட்டு வருகின்ற.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்க படுகிறது. அதே சமயம் கேரளாவில் கடைபிடிக்க பட்டு வந்த ட்ரிபிள் லாக்டவுன் தளர்த்த பட்டுள்ளது. இதனால் கேரள எல்லை பகுதியான ஊரம்பு பகுதியில் கடைகள் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இயங்கி வருகின்றன. இதனால் தமிழக எல்லையோரம் வசிக்கும் மக்கள் பொருட்கள் வாங்க ஊறம்பு பகுதியில் குவிந்து வருகின்றனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது கருப்பு பூஞ்சை நோயும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story