வங்கி கணக்கை ஹேக் செய்து மோசடி... ரூ.8.54 லட்சத்தை இழந்த தனியார் ஊழியர்

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் மூக்கண்டப்பள்ளி உள்ள தனியார் நிறுவனத்தில் முதன்மை அலுவலராக செந்தில்நாதன் (62) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார். பொருட்களுக்கான தொகையை, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் மூலமாக அனுப்பியுள்ளார். ஆனால், 19ஆம் தேதி ஸ்பின்னிங் மில் நிர்வாகிகள், தங்களின் வங்கி கணக்குக்கு பணம் வரவில்லை என்று மறுபடியும் பணம் கேட்டுள்ளனர். சந்தேகமைடந்த செந்தில்நாதன், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், செந்தில்நாதனின் வங்கி கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்து, 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை பணத்தை திருடியது தெரியவந்தது. மர்மநபர்களை தேடும் பணியில் கிருஷ்ணகிரி போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்