ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு ஜாமின்
ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு ஜாமின்
ஆண்டு சிறை தண்டனை நிறுத்தம் - முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்துக்கு ஜாமின்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவத்திற்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம், நிறுத்தி வைத்து அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவு குற்றப்பத்திரிகைக்கு முரணானது என வாதிட்டார். எதற்காக இந்த முடிவு என்பதை, விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை எனவும், சொத்துக்கள் மதிப்பீடு செய்ததில் தவறுகள் உள்ளதாக கூறினார். முன்னாள் எம்.எல்.ஏக்கு, 72 வயதாகி விட்டதை கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 4 ஆண்டு சிறையை, நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், அபராத தொகை 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயில், ஏழரை லட்சத்தை ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
Next Story