ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை
x
ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம்... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராடிய மக்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொள்ள அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தூத்துக்குடியில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், திரேஸ்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ மக்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் உச்சநீதிமன்ற தீர்ப்பை எடுத்துக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்