ஆக்சிஜன் தயாரிக்கலாம் - அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்து

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்கள் தற்காலிக அனுமதி வழங்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆக்சிஜன் தயாரிக்கலாம் - அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்து
x
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்கள் தற்காலிக அனுமதி வழங்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏன் ஏற்று நடத்தக் கூடாது? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அது குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், திமுக சார்பில், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, பாஜக சார்பில் எல்.முருகன், கே.டி.ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்தரசன், வீரபாண்டி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர். பா.ம.க சார்பில், ராதாகிருஷ்ணன் தேமுதிக சார்பில் அன்புராஜ், பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும், டிஜிபி திரிபாதியும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திற்குப் பின் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்கள் தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்திருந்தன.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் மின்சாரம் வழங்கக் கூடாது என்று திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தினார்

மேலும், மாவட்ட, மாநில அளவில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி வேண்டுகோள் விடுத்தார்

அதே போன்று, உயிர் பிரச்னை என்பதால் ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஆலையை திறக்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்தார்.

மக்களின் உயிர்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஸ்டெர்லைட் ஆலையை அரசாங்கமே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும் என்றும், ஆலையை அரசுடமையாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதே போன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும், ஸ்டெர்லைட் ஆலையை கையகப்படுத்தி ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும், ஆக்சிஜன் உற்பத்தி தவிர்த்து வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்றும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்