பைக்குகளுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி... இருசக்கர வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்"

இருசக்கர வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவது தான் காரணம் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்ற உத்தரவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள் இருசக்கர வாகன விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த, உற்பத்தி நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள்
ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்குவது எப்படி என கற்றுக்கொடுக்கவும் மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story