கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
x
கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இந்த திட்டத்தைக் கைவிடப்போவதாக மத்திய அரசு மீண்டும் அறிவித்திருப்பதை ஏற்க முடியாது என, அறிக்கையில் கூறி உள்ளார்.இந்தப் பாதையில் சுற்றுலாத் தலங்களும், ஆன்மிகத் தலங்களும் இருப்பதால் பயணிகள் ஆதரவு குறையாது என்று தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி முதல் சென்னை வரையிலான கிழக்குக் கடற்கரையில் அதிக எண்ணிக்கையில் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும்,இதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல ரயில்சேவை அவசியம் என்று கூறியுள்ளார்.இப்பாதையில் சரக்குத் தொடர்வண்டிகளை இயக்குவதன் மூலம், குறுகிய காலத்தில் முதலீட்டை திரும்பப் பெற முடியும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.எந்த வகையிலும்  சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை  லாபம் தரும் ஒன்றாகவும் இருக்கும் நிலையில், அதைக் கைவிடுவது நியாயமல்ல என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்