வட்டிக்கு வட்டி தொடர்பான வழக்கு; மத்திய அரசு முடிவு செய்து கொள்ளலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி

கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது.
x
கொரோனா கடன் தவணை உரிமை காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடன்களுக்கு, வட்டிக்கு வட்டி வசூலிப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது. 


இதுதொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கி அமர்வு விசாரித்து வந்த நிலையில், நீதிபதி எம்.ஆர்.ஷா இன்று தீர்ப்பை வாசித்தார்.

பொருளாதார மற்றும் நிதி கொள்கை தொடர்பாக மத்திய அரசும், ஆர்.பி.ஐ தான் முடிவெடுக்க முடியும் என்றும், தாங்கள் அதில் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

முழுமையாக வட்டி தள்ளுபடி செய்வது, முதலீட்டாளர்களை பாதிக்கும் என நீதிபதி சுட்டிக்காட்டி உள்ளார். 

தங்களால் முடிந்தவரை , மத்திய அரசு கடன் வாங்கியவர்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. 

தவணையை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்துள்ளது. மேலும், இது நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டது அல்ல என கருதுவதாகவும், 

மத்திய அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

கொரோனா தவணையுரிமை காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு கூட்டு வட்டி அல்லது அபராத வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு தடை விதித்தும் நீதிபதிக​ள் உத்தரவிட்டுள்ளனர்.  

கொரோனா தவணையுரிமை காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கு, ஏற்கெனவே கூட்டு வட்டி வசூலிக்கப்பட்டிருந்தால் அதை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், முடியாத நிலையில் அதனை  சரிக்கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளனர். 

மேலும் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கூடுதல்  நிவாரணம் வழங்குவது தொடர்பாக  ஆர்.பி.ஐ. முடிவெடுக்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்