9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை - 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும்
பள்ளிகளில் கொரோனா பரவி வருவதால், 9, 10 மர்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி முதல், மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கொரோனா பரவி வருவதால், 9, 10 மர்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும் 22ம் தேதி முதல், மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொற்று பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தடுக்கும் வகையில், வரும் 22ம் தேதி முதல் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப் படுகிறது என்றும் கூறியுள்ளார்.
12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ள ராஜிவ் ரஞ்சன்,
9 முதல் 11 வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆன்-லைன் வழியில் தொடர்ந்து கல்வி கற்கலாம் என்று கூறியுள்ளார்.
மாநில பாடத்திட்டம் தவிர்த்து, பிற வாரிய மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும்,
விடுதிகள் தொடர்ந்து இயங்கவும் அனுமதிப்பதாக தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
Next Story