தமிழகத்திற்கு ரூ.335.36 கோடி நிதி விடுவித்தது,மத்திய நிதி அமைச்சகம் வருவாய் பற்றாக்குறை நிதி ஒதுக்கீடு
15 வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் மாதாந்திர வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்திற்கு 335 கோடியே 36 லட்ச ரூபாயை, மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
15 வது நிதிக்குழு பரிந்துரை அடிப்படையில் மாதாந்திர வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்திற்கு 335 கோடியே 36 லட்ச ரூபாயை, மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.நிதிக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை நிதியை மத்திய அரசு விடுவித்து வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டுக்கான இறுதி மற்றும் 12-வது தவணையாக பல்வேறு மாநில அரசுகளுக்கு 6 ஆயிரத்து 194 கோடி ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது.இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு இதுவரை 4 ஆயிரத்து 24 கோடியே 94 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 74 ஆயிரத்து 340 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.மாதந்திர வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்திற்கு 335 கோடியே 36 லட்ச ரூபாயை, மத்திய நிதி அமைச்சகம் விடுவித்துள்ளது.
Next Story