பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயிடம் மோசடி...ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் மோசடி
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயிடம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயிடம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வசந்த மாளிகை, வாணி ராணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வாணிஸ்ரீ. இவர், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் 3 கிரவுண்ட் 1902 சதுர அடி நிலத்தை பத்மினி என்பவரிடமிருந்து வாங்கி உள்ளார். இதனிடையே கடந்த 2012ல் தன்னுடைய நிலத்தை சிலர் மோசடி செய்ததாக வாணிஸ்ரீ புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2013ல் 4 பேரை கைது செய்தனர். இதனிடையே மீண்டும் அதே நிலத்தை மோசடி செய்து அபகரித்ததாக 2018ல் வாணிஸ்ரீ புகார் அளித்தார். இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தியதில் போலி ஆவணங்களை தயாரித்து தமீம் அன்சாரி என்பவர் மோசடி செய்தது உறுதியானது. 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்க முயன்ற தமீம் அன்சாரியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Next Story