பட்டாசு ஆலை வெடி விபத்தால் தாய், தந்தையை பறிகொடுத்த 12 வயது சிறுமி....அரசு உதவிக்கரம் நீட்ட வலுக்கும் கோரிக்கை

சாத்தூர் அருகே நடந்த வெடிவிபத்தில் தாய், தந்தையை இழந்து 12 வயது சிறுமி நிர்கதியாகி இருக்கிறார்.
பட்டாசு ஆலை வெடி விபத்தால் தாய், தந்தையை பறிகொடுத்த 12 வயது சிறுமி....அரசு உதவிக்கரம் நீட்ட வலுக்கும் கோரிக்கை
x
சாத்தூர் அருகே நடந்த வெடிவிபத்தில் தாய், தந்தையை இழந்து 12 வயது சிறுமி நிர்கதியாகி இருக்கிறார். அவருக்கு உதவிக்கரம் நீட்ட  வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.எதிர்பாராமல் நடக்கும் ஒரு அசம்பாவிதம் பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் என்பார்கள்... அப்படி ஒரு சம்பவம் தான் விருதுநகர் மாவட்டத்தில் அர​ங்கேறி இருக்கிறது...சாத்தூர் அருகே நடுசுரங்குடியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு 12 வயதில் நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.கணவன் பாக்யராஜ், மனைவி செல்வி இருவரும் அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். வழக்கம் போல வேலைக்கு சென்ற அவர்கள், தங்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது தான் விபரீதம் நடந்தேறியது...திடீரென நடந்த வெடி விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனால் தாய், தந்தையை ஒரே நேரத்தில் பறிகொடுத்துவிட்டு ஆதரவின்றி நிற்கிறார் சிறுமி நந்தினி...பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வரும் இவருக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசும் உதவிக்கரங்கள் நீட்டினாலும் கூட, இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இங்கு முன்வைக்கப்படும் கோரிக்கை... 


Next Story

மேலும் செய்திகள்