இரு எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை இல்லை- அண்ணா பல்கலை,.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். சேர்க்கைக்கு அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். சேர்க்கைக்கு அனுமதியில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் வழக்கறிஞர் ஆஜரானர்.அப்போது இரு எம்டெக் படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டதால், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க சாத்தியமில்லை என்றார்.இதையடுத்து அரிதான சூழலை கருத்தில் கொண்டு , கால நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தை நாட முடியுமா என்பது குறித்து இன்று தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார்.
Next Story